முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா சாதாரண பிரிவுக்கு மாற்றம்

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

நியூயார்க்,ஆக.7 - சோனியா காந்திக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக முடிவடைந்தது. அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். இதனையொட்டி அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தி அடிக்கடி வெளிநாடு போய் வருவார். ஆனால் அவரது பயணம் ரகசியமாக இருக்கும். யாரும் கண்டு கொள்வதில்லை. இந்தத் தடவை திடீரென்று நியூயார்க் நகருக்கு போனார். அதுகுறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை. அதேசமயத்தில் காங்கிரஸ் விவகாரத்தை கவனிக்க ராகுல் காந்தி தலைமையில் 4 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். இதனால் எல்லோருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அதை விசாரிக்கும்போது அவர் அமெரிக்காவின் பொருளாதார நகரான நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் கேன்சர் சென்டர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்திருப்பது தெரியவந்தது. அவரை ராகுல் காந்தி, பிரியங்கா அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் உடன் இருந்து கவனித்து வருவதும் தெரிந்ததே. இந்தநிலையில் ஆபரேஷனுக்கு பிறகு சோனியா காந்தி வேகமாக குணமடைந்து வருவதாகவும் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் நியூயார்க்கில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் அவர் மேலும் விரைவாக குணமடைய ஆலயங்களில் பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன. சோனியா காந்தி விரைவில் குணமடைய பிரபல நடிகர் அமிதாப்பச்சனும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சோனியா காந்தி இன்னும் இரண்டு வாரத்தில் இந்தியா திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்