உத்திரப் பிரதேசத்தில் கனமழை- வெள்ளப்பெருக்கு

Image Unavailable

 

லக்னோ,ஆக.7 உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. மழை தொடங்கியதில் இருந்து ஜம்மு-காஷ்மீர், இமாசலப்பிரதேசம், பஞ்சாப்,அரியானா,ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. பாலைவனப்பகுதி அடங்கிய ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதுவும் கடந்த ஒருவார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. கங்கை நதியில் கடந்த ஒருவாரகாலமாக அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் ஓடுகிறது. ஒரு சில மாவட்டங்களில் வெள்ளம் தேங்கி உள்ளது. பல வீடுகள் இடிந்துவிழுந்தன. இதில் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வெள்ள நிவாரணப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்திலும் கடந்த பல நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் பலத்த மழை பெய்தது. மும்பை நகரில் கடந்த சில நாட்களாகத்தான் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ