கல்விக் கட்டண நிர்ணய குழு தலைவர் நியமனம்

Image Unavailable

சென்னை,ஆக.10 - தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழுவின் புதிய தலைவராக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கல்வி கட்டண நிர்ணய குழு அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு தலைமை செயலகம் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். ஏற்கனவே கல்விக் கட்டண நிர்ணய குழு தலைவராக இருந்த நீதிபதி ரவிராஜபாண்டியன் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாக தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பான வழக்கில் இரண்டு வாரங்களுக்குள் தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சிங்காரவேலுவை தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது. தி.மு.க. அரசால் கட்டண நிர்ணய குழுவின் தலைவராக ரவிராஜ பாண்டியன் நியமிக்கப்பட்டிருந்தார். அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ