முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஷாரப் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஆக.12  - பலூசிஸ்தான் தேசிய தலைவர் அக்பர் பஹ்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் அதிபர் முஷாரப் மீது ஒருவாரத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலூஸ்சிஸ்தான் மாகாண ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணை ஆமை வேகத்தில் நடக்கிறது என்றும் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. 

பலூஸ்சிஸ்தான் மாகாண தேசிய அரசியல் கட்சி தலைவர் அகபர் பஹ்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவத்தின்போது முஷாரப் பாகிஸ்தான் அதிபராக இருந்தார். முஷாரப்புக்கும் இந்த படுகொலைக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த படுகொலை தொடர்பான வழக்கு பலூஸ்சிஸ்தான் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினமும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு தலைமை நீதிபதி குவாசி பைஸ் ஈஸா கூறுகையில் முன்னாள் அதிபர் முஷாரப் மீது பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் இன்னும் 7 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த கொலை வழக்கில் புலன் விசாரணை ஆமை வேகத்தில் நடைபெறுகிறது என்றும் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஈஸா கூறினார். அரசு தரப்பில் ஆஜரான துணை அட்டர்னல் ஜெனரல் மாலிக் சிகந்தர் வாதாடுகையில் லண்டனில் இருக்கும் முஷாரப்பை பாகிஸ்தானுக்கு கொண்டுவர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பிக்க ஒருவார காலம் அவகாசம் ஐகோர்ட்டு மூலமாக கேட்கப்பட்டுள்ளது என்றார். பலூஸ்சிஸ்தான் அடிஷனல் அட்வகேட் ஜெனரல் நஸ்ருல்லா அசாக்ஜாய் ஆஜராகி வாதாடுகையில் இந்த கொலை வழக்கில் முஷாரப்பை பாகிஸ்தானுக்கு அழைத்துவர ஏற்பாடுகளை விரைவாக செய்ய வேண்டும் என்று பெடரல் அரசை மாகாண அரசு கேட்டுக்கொண்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!