எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.12 - தமிழக சட்டபேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு உள்நோக்கம் கற்பித்து பேசியுள்ள இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு இந்திய தூதர் மூலம் மத்திய அரசு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று இலங்கை உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இயற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே விமர்சித்ததால் எழுந்துள்ள பதட்ட நிலை குறித்து 11.8.2011 அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின் போது, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தி அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்ததை நீnullங்கள் எல்லாம் அறிவீர்கள். எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், இனப் படுகொலையை நடத்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க இந்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்த வேண்டும் என்றும்; இது மட்டுமல்லாமல், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் முழு சம உரிமை கிடைக்கும் வரை அந்நாட்டின் மீது, பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அதனை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபய ராஜபக்ஷே ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருப்பது இலங்கை அரசு தான் செய்த தவற்றை நியாயப்படுத்துவது போல் அமைந்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக கோத்தபய ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த மார்சுகி தாருஸ்மேன், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ராட்னர், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா ஆகியோர் அடங்கிய, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே ஒழிய, அரசியல் ஆதாயத்திற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை முதலில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிங்களர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் தான் நடத்தப்படுகின்றனர் என்றும்; மற்றவர்களை விட தங்கள் நாட்டு குடிமக்கள் மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பதாகவும் பேட்டி அளித்திருக்கிறார் கோத்தபய ராஜபக்ஷே.
இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது முழுப் nullசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும். இலங்கை ராணுவத்திற்கும் எல்.டி.டி.ஈ.க்கும் இடையேயான போரின் உச்சகட்ட பகுதியான 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தையும் அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் சபை குழு, இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட, குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதியின் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்தது; மருத்துவமனைகள் மீது குண்டுமழை பொழிந்தது; மனிதாபிமானமற்ற முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது; இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதி வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது; என பல மனிதாபிமானமற்ற பன்னாட்டு போர் நெறிமுறைகளை மீறிய செயல்களை இலங்கை ராணுவம் நிகழ்த்தியுள்ளதாக கண்டறிந்துள்ளது.
இது மட்டுமல்லாமல், மிகப் பெரிய ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த பின்னரும் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த பகுதிகளில் குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை ராணுவம் இருந்தது என்றும் இந்த வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் இலங்கை அரசு தடையை உருவாக்கியதாகவும் ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து, பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பதும் தெளிவாகிறது.
அடுத்தபடியாக, இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை கூறி இருக்கிறார் கோத்தபய ராஜபக்ஷே. கச்சத்தீவிற்கு இதுவரை வந்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மற்றும் புனிதப் பயணிகள் இதே காரணத்திற்காக வந்து செல்லும் போது, பயண ஆவணங்களையோ அல்லது நுழை விசைவையோ பெற வேண்டும் என இலங்கை கோராது என்று இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தும் பொருட்டு, இந்திய மீனவர்கள் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம்; மற்றும் வலைகளை உலர்த்துவதற்கு அந்தத் தீவை பயன்படுத்திக் கொள்ளலாம் என அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணான வகையில் நடந்து கொண்டு விட்டு தமிழ்நாடு அரசிற்கு அறிவுரை கூறுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. மேலும், கோத்தபய ராஜபக்ஷே, வட இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தான் தற்போதைய முக்கியப் பணி என்றும்; போர்க் குற்றவாளிகள் என்று தற்போது கூறுவது பயனற்றது என்றும் பேட்டி அளித்து இருக்கிறார். இலங்கையில் நிலவும் உண்மை நிலவரம் என்னவென்றால், போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவோ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தோ எந்தவிதமான நடவடிக்கையும் இலங்கை அரசால் எடுக்கப்படவில்லை என்பது தான். இவருடைய இந்தப் பேட்டியிலிருந்தே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் புரிந்து இருக்கிறது; இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்திருக்கிறது என்று மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையிலேயே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் செய்யவில்லை என்றால், இது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தயார் என இலங்கை அரசு அறிவித்து இருக்க வேண்டும்.
ஆனால், அதைச் செய்யாமல் தேவையற்ற பேட்டிகளை அளித்து வருவது செய்த தவறை மூடி மறைக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகத்தை சர்வதேச நாடுகள் மத்தியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு; ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது; இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு, என பல்வேறு வகையான கண்துடைப்பு நாடகங்களை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நடத்திய போது வாய் திறக்காத கோத்தபய ராஜபக்ஷே, நான் கொண்டு வந்த தீர்மானத்தை விமர்சிக்கிறார் என்றால், அந்த அளவுக்கு இந்தத் தீர்மானத்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை சட்டமன்ற உறுப்பினர்களாகிய nullநீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இலங்கை தமிழ் சகோதர, சகோதரிகளின் நெஞ்சை பிளக்கும் துயரங்களை அறிந்த சர்வதேச நாடுகள் போர்க்குற்றத்திற்கு இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதுகின்ற சூழ்நிலையில், போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் அரசியல் ஆதாயத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபய ராஜபக்ஷேவுக்கு அளித்திருக்கிறது என்ற ஐயம் நடுநிலையாளர்களுக்கு, தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை; இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை; சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையிலான அரசு ஓயாது என்பதையும்; தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு இந்தியத் தூதர் மூலம் தனது கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ