முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே மாதம் முதல்வாரத்தில் தேர்தலை நடத்த வைகோ வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.4 - மாணவர்கள் தேர்வை கருத்தில் கொண்டு மே மாதம் முதல் வாரத்திற்க்கு சட்டசபை தேர்தலை தள்ளிவைக்க வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார் இதுப்பற்றி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மத்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:​ மத்திய தேர்தல் அணியும் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 13​ந் தேதி சட்டசபை தேர்தல் அறிவித்து உள்ளது. மார்ச் 19​ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த 2​ந் தேதி பிளஸ்​2 தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. 25​ந் தேதி முடிகிறது. 7 லட்சத்து 23 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 22​ந் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை 11 லட்சம் பேர் எழுதுகின்றனர். அதே போல பல்கலைக் கழக தேர்வுகள் ஏப்ரல் 5​ந் தேதி தொடங்கி மே 2​ந் தேதி வரை நடக்கிறது. வருகிற 19​ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால் 20​ந் தேதியில் இருந்து ஏப்ரல் 11​ந் தேதி வரை தேர்தல் பிரசாரம் தீவிரமாக இருக்கும். வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பது, ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்வது என பலவகையிலும் பிரசாரம் நடக்கும். இது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும். இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர். மேலும் ஏப்ரல் 14​ந் தேதி சித்திரை தமிழ்ப்புத்தாண்டு நாள் கொண்டாட்டம் வருகிறது. இது தமிழர்களுக்கு முக்கிய திருநாளாகும். தேர்தல் வேலைகளால் திரு விழாவுக்கும் பாதிப்பு ஏற்படும். மேலும் ஏப்ரல் 13​ந் தேதி தேர்தலுக்காக விடுமுறை விடப்படுகிறது. 14​ந் தேதி அம்பேத்கார் பிறந்த நாள் விடுமுறை, 16​ந் தேதி மகா வீர் ஜெயந்தி விடுமுறை, 17-ந் தேதி ஞாயிறு விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை வருகிறதுஇப்படி தொடர்ந்து விடுமுறை வருவதால் வேலை பார்ப்பவர்களும், பொது மக்களும் 5 நாட்கள் விடு முறையை எங்காவது சென்று கொண்டாட வேண்டும் என்றே நினைப்பார்கள். 12​ந் தேதி இரவே அந்த இடங்களுக்கு சென்று விடுவார்கள். இதனால் ஓட்டுப் போட ஆள்வராமல் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்து விடும். மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டுமானால் அவர்களுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையில் தேர்தல் நடத்த வேண்டும். அப்போது தான் ஜனநாயகம் ஓங்கும். எனவே தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும், அனைத்து மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கை மே 13​ந் தேதி தான் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்னதாக மே முதல் வாரத்தில் இங்கு தேர்தலை நடத்தலாம். மே 4​ந் தேதி தேர்தலை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என கருதுகிறோம்.இவ்வாறு வைகோ அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்