முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.19 - ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்துள்ள சி.பி.ஐ. 3 வது குற்றப்பத்திரிக்கையை தயாரித்து வருகிறது. அதன் பிறகு மேலும் சிலர் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் ஊழல் பண பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் லூப் டெலிகாம் நிறுவனத்தின் 2 கிளை நிறுவனங்கள், அன்னிய செலவாணி விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதன் மூலம் ரூ. 384 கோடி ஊழல் நடந்திருப்பது தொடர்பாக ஆவணங்களை அமலாக்கப்பிரிவினர் சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே லூப் டெலிகாமில் இருந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரூ. 4,300 கோடி அளவுக்கு முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony