முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபிய தலைநகரை புரட்சிப் படை கைப்பற்றியது

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

திரிபோலி, ஆக.23 - லிபிய தலைநகர் திரிபோலியை புரட்சிப் படை கைப்பற்றியது. கடாபியின் இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். லிபியாவில் அதிபர் கடாபியின் ஆட்சியை எதிர்த்து பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த 5 மாதத்தில் பென் காசி, பிரகா உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் புரட்சிப் படைகள் கொண்டுவந்துள்ளன. போராட்டத்தை ஒடுக்க கடாபி ராணுவத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் புரட்சிப் படையினர் தொடர்ந்து முன்னேறி தலைநகர் திரிபோலியை கைப்பற்றினர். திரிபோலியைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக ராணுவத்தின் முக்கிய தளத்தையும் கிரீன் சதுக்க பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர் புரட்சிப் படையினர்.

திரிபோலிக்குள் அவர்கள் நுழைந்ததும், அங்கு குடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மார்டயர்ஸ் சதுக்கத்திற்கு வந்து அவர்களை வரவேற்றனர். அவர்கள் தங்களது கைகளில் லிபிய தேசிய கொடிகளை அசைத்து மகிழ்ந்தனர். கடவுள் மிகப்பெரியவர் என்று கூறி நடனமாடி மகிழ்ந்தனர். கடாபி மற்றும் அவரது மகன்களுக்கு எதிராக கோஷங்களை அவர்கள் எழுப்பினர். 

இதனிடையே கடாபியின் இரண்டு மகன்கள் புரட்சிப் படையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சைப் அல் இஸ்லாம் என்பவரது பெயர் மட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் கடாபி தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பது தெரியவில்லை. புரட்சிப் படையினரிடம் தான் சரணடைய மாட்டேன் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.கடாபியின் வீழ்ச்சிக்கு மகிச்சி தெரிவித்தும் புரட்சிப் படையை வாழ்த்தியும் பொதுமக்கல் ஒருவருக்கொருவ் எஸ்.எம்.எஸ். அனுப்பி மகிழ்ந்தனர். தற்போது தலைநகரம் திரிபோலி புரட்சிப் படையினர் கைவசம் உள்ளது. ஆனால் கடாபி தங்கியிருக்கும் பாப் அல் அஜீஸியா என்ற இடம் மட்டும் ராணுவத்தினர் கைவசம் உள்ளது. இதை லிபிய அரசு மறுத்துள்ளது. நாடு முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக லிபியா அறிவித்துள்ளது. புரட்சிப் படை தாக்கியதில் திரிபோலியில் 1300 பேர் இறந்ததாகவும் இன்னும் ராணுவம் புரட்சிப் படையுடன் சண்டையிட்டு வருவதாகவும் லிபிய ராணுவம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் புரட்சிப் படை திரிபோலியை கைப்பற்றியது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. எனவே அவர் பதவி விலகி மேலும் பலர் ரத்தம் சிந்துவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago