முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்சபையில் இடதுசாரிகள் பிரச்சினை - ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.26 - மேற்குவங்காளத்தில் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபையில் நேற்று இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பினர். இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தையொட்டி சபை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. மேற்குவங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இடதுகம்யூனிஸ்ட் தொண்டர்களும் தொழிலாளர்களும் தாக்கப்படுவதாக நேற்று லோக்சபை கூடியதும் கேள்வி நேரத்தின்போது இடதுசாரி கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். மேற்குவங்க அரசுக்கு எதிராக உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பிக்கொண்டு சபையின் மத்திய பகுதிக்கு சென்றனர். அங்கும் கோஷங்களை எழுப்பினர். சில உறுப்பினர்கள் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் தூக்கிப்பிடித்துக்கொண்டு கோஷம் போட்டனர். மேற்குவங்க மாநிலத்தில் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அந்த அட்டைகளில் எழுதப்பட்டிருந்தன. மேலும் சில உறுப்பினர்கள் சர்வாதிகாரம் ஒழிக என்றும் கோஷம் போட்டனர். இடதுசாரிகட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் தாக்கப்படுவதற்கும் கொலை செய்யப்படுவதற்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளும் திரிணாமூல் காங்கிரஸாரும் பின்னணியாக இருக்கிறார்கள் என்றும் இடதுசாரி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் சபையில் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் எழுந்து, உண்ணாவிரதம் இருந்து அண்ணா ஹசாரே விவகாரம் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதில் அளித்தார். மேலும் சபையின் இருக்கைக்கு செல்லுமாறு இடதுசாரி உறுப்பினர்களை சபாநாயகர் மீரா குமார் கேட்டுக்கொண்டார். அதை உறுப்பினர்கள் காதில் போட்டுக்கொள்ளாததால் கூச்சல் குழப்பம் தொடர்ந்து நீடித்தது. இதனால் சபையை நடத்த முடியால் நேற்று பிற்பகல் 11.30 மணி வரை ஒத்திவைத்தார். அடுத்து சபை கூடியதும் இதே கூச்சல் குழப்பம் நீடித்ததால் மீண்டும் ஒரு முறை சபையை மீரா குமார் ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony