Idhayam Matrimony

திரிபோலியில் மயான அமைதி - அழுகிக் கிடக்கும் பிணங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

திரிபோலி, ஆக.28 - திரிபோலி நகரை புரட்சிப் படையினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பிறகு இப்போது மயான அமைதியுடன் காட்சியளிக்கிறது.  இதுஒரு புறம் இருக்க பல மருத்துவமனைகளில் ஏராளமான பிணங்கள் அழுகிய நிலையில் குவியல் குவியலாக கிடக்கின்றன. லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திவந்த கர்னல் மும்மர் கடாபிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கொதித்தெழுந்தனர். கடாபியை விரட்டியடிக்க புரட்சிப் படைகள் போரிட்டன. புரட்சிப் படைகளுக்கும் கடாபியின் விசுவாச ராணுவத்திற்கும் இடையே நாடு முழுவதும் பல இடங்களில் யுத்தம் நடைபெற்றது. புரட்சிப் படைகளுக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் களத்தில் இறங்கின. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்த போர் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இறுதிச் சண்டையாக திரிபோலியில் கடாபி விசுவாசப் படைகளுக்கும் புரட்சிப் படைகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் ஒரே நாளில் 400 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து கடாபி வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்பது இன்னும் திட்டவட்டமாக தெரியவில்லை. 

திரிபோலி நகர் தற்போது புரட்சி படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எங்கும் மயான அமைதி நிலவுகிறது. மின்சாரம் குடிநீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இருந்தாலும் 42 ஆண்டுகால கடாபி ஆட்சி முடிவுக்கு வந்ததை திரிபோலி மக்கள் ஆங்காங்கே சில இடங்களில் தெருக்களில் கோஷங்களை எழுப்பி வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தினர்.  பல மருத்துவமனைகளில் அழுகிய நிலையில் பிணங்கள் கிடக்கின்றன. இவர்கள் யாரால் கொல்லப்பட்டார்கள்? என்பது தெரியவில்லை. இந்த பிணஙகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு மருத்துவமனையில் மட்டும் 21 பிணங்கள் குவியலாக வைக்கப்பட்டு உள்ளன. தெருக்களில் ஆங்காங்கே குப்பை கூளங்கள் சேர்ந்துள்ளன. தெருக்களிலும் கூட சில இடங்களில் அழுகிப்போன பிணங்கள் காணப்பட்டன. உங்களுக்கு விடுதலை, இனி தலைநிமிர்ந்து நடக்கலாம் என்று திரிபோலி மக்களுக்கு புரட்சிப் படையினர் அறைகூவல் விடுத்துள்ளனர். இதுவரை பறந்துகொண்டிருந்த கடாபியின் கொடிகள் கிழித்தெறியப்பட்டு புரட்சிப் படையினரின் கொடிகள் பல இடங்களில் ஏற்றப்பட்டுள்ளன. 

படுகாயம் அடைந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். சிறை வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகளை சரியாக நடத்துமாறும் செஞ்சிலுவை சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. திரிபோலி நகரம் நிசப்தமாக இருந்தாலும்கூட ஆங்காங்கே சில இடங்களில் அவ்வப்போது துப்பாக்கி சுடும் சப்தங்களும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago