முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூயார்க்கை பயங்கர புயல் தாக்கியது சிறுவன் உள்பட 8 பேர் பலி

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

நியூயார்க் ,ஆக.- 29 - அமெரிக்காவின் வர்த்தக நகரான நியூயார்க் நகரை ஐரனி என்ற பயங்கர புயல் தாக்கியதில் 11 வயது சிறுவன் உள்பட 8 பேர் பலியானார்கள். மேலும் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். அமெரிக்காவுக்கு தென்மேற்கே உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் பகாமாஸ் பகுதியில் புயல் சின்னம் உருவாகியது. இதுபற்றி 2 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டது. இந்த புயலுக்கு ஐரனி என்ற பெயரும் சூட்டப்பட்டது. இந்த புயல் அமெரிக்காவின் கிழக்கு கடலோரப்பகுதிகளை கடுமையாக தாக்கியது. மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் அப்போது புயல் காற்று வீசியது. இதனால் இடைவிடாது மழை கொட்டியது. சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் அச்சத்தின் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. காதை பிளக்கும் வகையில் இடிமின்னலுடன் இடைவிடாத மழை கொட்டியது. வாஷிங்டன் முதல் பாஸ்டன் பகுதி வரை உள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. வெர்ஜினீயா,புளோரிடா ஆகிய பகுதிகளிலும் புயல் தாக்கியது. இந்த பலத்த புயலுக்கு குறைந்தபட்சம் 8 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புயல் பற்றி வாஷிங்டன் மேயர் மைக்கேல் கூறுகையில் புயல் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த பணி முடிவடைந்துவிட்டது என்று கூறினார். இருப்பினும் இயற்கை நம்மை விட வலிமையானது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். மணிக்கு 85 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று வீசியது. புயலுக்கு பலியானவர்களில் 11 வயது சிறுவனும் ஒருவன். இவன் மீது மரம் விழுந்ததில் அந்த இடத்திலேயே சிறுவன் உயிர் பிரிந்தது. கிழக்குக்கடற்கரை பகுதியில் புயலால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் அவதிக்கு ஆளாகினர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நியூஷெர்சியில் மட்டும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புயல் வருவதற்கு முன்பே வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக நியூயார்க், வாஷிங்டன், வெர்ஜீனியா, மேரிலாண்ட் உள்ளிட்ட பல நகரங்களில் அவரசநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் 2 தினங்களுக்கு முன்பே தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டனர். இதன் காரணமாக கடைகளில் கூட்டம் அலைமோதியது. புயல் தற்போது பலவீனமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். நியூயார்க் மற்றும் நியூஷெர்ஜியில் இருந்து கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டார்கள். ராணுவம் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவர்கள் உதவி வருகிறார்கள். சுற்றுலா சென்றிருந்த அதிபர் பாரக் ஒபாமா உடனடியாக வாஷிங்டன் திரும்பி நிவாரண பணிகளை கவனித்தார். தக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த புயல் காரணமாக பல நகரங்களில் மரங்கள் விழுந்து கிடப்பதால் சாலை போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டன. அமெரிக்காவின் பல பகுதிகளில் ஆண்டுக்கொருமுறை இப்படி ஏதாவது ஒரு புயல் தாக்குவது வாடிக்கையாகிவிட்டது.   
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்