முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்மாதம் 2-ம் வாரத்தில் சிகிச்சை முடிந்து சோனியா திரும்புகிறார்

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, செப்.- 1 - அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்தபின்னர் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வுவெடுத்துவரும் சோனியா காந்தி இம்மாதம் 2 வது வாரத்தில் டெல்லி திரும்புகிறார். சோனியா காந்திக்கு கருப்பை வாய் புற்றுநோய் இருந்ததாக கூறப்பட்டது. இதற்காக உலகிலேயே மிகவும் பிரபலமான நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின்னர் அவர் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுத்துவந்தார். சோனியாகாந்தி இம்மாதம் இரண்டாவது வாரத்தில் டெல்லிக்கு திரும்புவார் என்று தகவல்கள் கூறுகின்றன. டெல்லி திரும்பினாலும்கூட அவர் கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டார் என்று கூறப்படுகிறது. அதுவரை அவரால் அமைக்கப்பட்ட ராகுல்காந்தி உள்ளிட்ட 4 பேர் அடங்கிய குழுவே கட்சிப் பணிகளை கவனிக்கும் என்று தெரிகிறது. சோனியாகாந்தி இல்லாத நிலையில் அன்னா ஹசாரே விவகாரத்தை கையாளுவதில் மத்திய அரசும் காங்கிரசும் கடுமையாக திணறிப் போய்விட்டன.   மேலும் மக்களிடம் கடும் அதிருப்தியை சம்பாதித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!