முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் மற்ற நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.8 - டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து நாட்டின் பிற முக்கிய நகரங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கல். 45 முதல் 50 பேர் வரை படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. பாராளுமன்றத்திற்கான பாதுகாப்பு பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. செங்கோட்டை, இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  நகரின் அனைத்து நுழைவு வாயில்களிலும் நகருக்குள் நுழையும், நகரிலிருந்து வெளியேறும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.   மேலும் நாட்டின் பிற முக்கிய நகரங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!