முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி ஜாமீன் மனு: வரும் 22ம் தேதி விசாரணை

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, அக்.19 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ராசா, கனிமொழி எம்.பி., உட்பட 17 பேர் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் உள்ளனர். இதில் கனிமொழி உள்பட சிலரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை வரும் 22ம் தேதி நடக்கிறது. கனிமொழி எம்.பி., சார்பில் ஜாமீன் வழங்கக்கோரி பலமுறை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவற்றை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. குற்றச்சாட்டு பதிவு செய்த பிறகே ஜாமீன் மனு விசாரணைக்கு ஏற்கப்படும் என்று கோர்ட் அறிவித்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யும் நடைமுறை முடிந்த பிறகு ஜாமீன்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி சைனி நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். இதுபோல் சினியுக் நிறுவனர் கரீம் மொரானி, ரிலயன்ஸ் சுரேந்திர பிரபா ஆகியோரின் ஜாமீன் மனுக்களும் விசாரிக்கப்படலாம் எனஅறு தெரிகிறது. ஆனால் தற்போது இந்த மனுக்களின் விசாரணை 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே கரீம்மொரானி, கனிமொழி மற்றும் சுரேந்திரபிரபா ஆரியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை 22ம் தேதி நடக்கிறது. கனிமொழிக்கும் மறஅறவர்களுக்கும் ஜாமீன் கிடைக்குமா என்பது அன்று தெரியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!