முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடியூரப்பா மீதான மனு விசாரணை ஒத்திவைப்பு

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

 

பெங்களூர், அக். 19 - முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான முதல் புகார் மனு மீதான விசாரணையை வரும் 29 ம் தேதிக்கு லோக்அயுக்தா சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பெங்களூரை சேர்ந்த வழக்கறிஞர் சிராஜின்பாஷா லோக்அயுக்தா நீதிமன்றத்தில் 5 புகார் மனுக்களை தாக்கல் செய்திருந்தார். பெங்களூர் தெற்கு தாலுகா, ராச்சேன ஹள்ளி கிராமத்தில் அரசு கையகப்படுத்திய நிலத்லை அதில் இருந்து விடுவித்து சட்ட விரோதமாக ரத்து உத்தரவை பிறப்பித்து தனது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் சோகன்குமார் உள்ளிட்ட நெருங்கியவர்களுக்கு சாதகமாக ஒதுக்கியதால் மாநில அரசுக்கு ரூ. 40 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக முதல் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த புகார் மனு தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லோக்அயுக்தா போலீசாருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 202 ன் கீழ் விசாரணை நடத்தி அறிக்கையை ஏற்கனவே போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதன் பின்னணியில் இந்த புகார் மனு மீதான விசாரணை லோக்அயுக்தா சிறப்பு நீதிபதி சசீந்திரராவ் முன்பு நடந்தது. இந்த மனு மீதான விசாரணை வரும் 29 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago