எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, அக். 19 - சட்டசபைக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. மகராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் இம்மாதம் 13 ம் தேதி நடைபெற்ற கடக்வாஸ்லா சட்டசபை இடைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. பா.ஜ.க வேட்பாளரான பீம்ராவ் தப்கிர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் றர்ஷதா வான்ஜாலேயை 3 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சரத்பவாரின் மகளான சுப்ரியா சுலேயின் பாராமதி மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலம் சிவம் மாவட்டத்தில் கடந்த 13 ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் சவிதா சிங் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் பரமேஷ்வர் சிங்கை காட்டிலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கூடுதலாக பெற்றார். அதே போல் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி வெற்றி பெற்றுள்ளது. நிஜாமாபாத் மாவட்டத்தில் பன்ஸ்வாடா சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் சீனிவாச ரெட்டி 49, 889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து 294 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. தனித் தெலுங்கானா மாநில பிரச்சினையில் சீனிவாச ரெட்டி கடந்த மார்ச் மாதம் தெலுங்கு தேச கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


