முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலை ஒழிக்க குண்டுகளையும் சந்திக்க தயார்: ஹசாரே

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.20 - ஊழலை ஒழிக்க புல்லட் குண்டுகளையும் சந்திக்க தயார் என்று அண்ணா ஹசாரே உறுதியாக கூறியுள்ளார். ஊழலை ஒழிக்க பாடுபட்டு வரும் பிரபல காந்தீயவாதி அண்ணா ஹசாரே தலைமையில் உள்ள குழுவினர் மீது சமூக விரோதிகளும் சுயநலமிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். முதலில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது சுப்ரீம்கோர்ட்டில் வைத்தே தாக்குதல் நடத்தினர். அதனையடுத்து கேஜரிவால் மீது செறுப்பு வீசி தாக்குதலை நடத்தியுள்ளனர். 

இதுகுறித்து அண்ணா ஹசாரே கூறுகையில் நாட்டில் ஊழலை ஒழிக்க எங்கள் மீது செறுப்புகளை வீசுவதை மட்டுமல்ல, எங்களை நோக்கி வரும் புல்லட் குண்டுகளையும் சந்திக்க தயார் என்றார். அண்ணா ஹசாரே தற்போது அவரது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் மெளனம் இருந்து வருகிறார். செறுப்பு வீசப்பட்டது குறித்து கவலையுடன் ஹசாரே வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஊழல் குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விரைவில் உத்திரப்பிரதேச மாநிலம் செல்லவிருப்பதாகவும் ஹசாரே தெரிவித்துள்ளார். கேஜரிவால் மீது செறுப்பு வீசியது துரதிர்ஷ்டவசமானது. செறுப்பு வீசுபவர்களை மட்டுமல்ல புல்லட் குண்டுகளையும் நாங்கள் நேருக்கு நேர் சந்திக்க தயாராக இருப்பதாகவும் ஹசாரே உறுதியாக கூறியுள்ளார். கேஜரிவால் மீது தாக்குதல் நடத்தியிருப்பதற்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்திருப்பதை நாங்கள் கண்டியிருக்கிறோம். யார் மீதும் தாக்குதல் நடத்துவதை எதிர்க்கிறோம். ஊழலையும் நாங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறோம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரஷித் ஆல்வி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். கேஜரிவால் மீது தாக்குதல் நடத்தியிருப்பது ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது என்று பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. யாருக்காவது பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று கோரினால் அவர்களுக்கு மத்திய அரசு முழு பாதுகாப்பு கொடுக்கும் என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!