முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணி மேரி கல்லூரி மாணவிகள் திடீர் சாலை மறியல்

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.8 - ராமேரி கல்லூரியைச்சேர்ந்த 3 மாணவிகள் சாலையை கடக்கும்போது கடந்த 28-ந் தேதி மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு மாணவி இறந்தார். மற்ற 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்டு தவறான சிகிச்சையால் இறந்த மாணவிக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று நேற்று காலை சென்னை ராணி மேரி கல்லூரி மாணவிகள் கல்லூரிக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கடந்த 28-ந் தேதி திங்கட்கிழமை, ராணி மேரி கல்லூரி மாணவிகளான ரஞ்சிதம், கல்பனா மற்றும் காயிதே மில்லத் கல்லூரி மாணவி சந்தியா ஆகிய 3 பேரும், லேடி வெல்லிங்டன் பெண்கள் விடுதிக்கு முன்னால் சாலையை கடக்கும்போது மோட்டார் சைக்கிள் மோதியதால் படுகாயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த வெங்கடேசன், ஜீவானந்தம் ஆகிய 12 பேரும் படுகாயமடைந்தனர்.

சாலையை கடந்த 3 மாணவிகள், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஆகிய 5 பேரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 3-ந் தேதி வியாழக்கிழமை ரஞ்சித்துக்கு ஆபரேஷன் நடந்தது. மறுநாள் சிகிச்சை பலனின்றி ரஞ்சிதம் இறந்தார். இதையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததால் ரஞ்சிதம் இறந்துவிட்டதாக கூறி மாணவிகள் மருததுவமனைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த வெங்கடேசன், ஜீவானந்தம் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரஞ்சித்தின் உடல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவருடைய தாயார் கண்ணம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற 2 மாணவிகள் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதையொட்டி நேற்று காலையில் ராணிமேரி கல்லூரி மாணவிகள் 500 பேர், கல்லூரிக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுடன் புரட்சிகர மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கும் கலந்து கொண்டனர். போலீஸ் உதவி கமிஷனர்கள் வசந்தகுமாரி, கண்ணன் தலைமையில் போலீஸ் படைகுவிக்கப்பட்டது.

விபத்தில் மரணம்  அடைந்த மாணவிக்கு அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 மாணவிகளுக்கான மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும்.

கல்லூரிக்கு முன்பு வி.ஐ.பி.க்கள் வந்தால் மட்டுமே போலீசார் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மற்ற நேரங்களில் வருவதில்லை. காலையிலும், மாலையிலும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கல்லூரி முன்பு வேகத்தடை அல்லது சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து மாணவிகள் கோஷம் போட்டனர்.

கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியைகள் சாலைக்கு வந்து மாணவிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயல்வதாக கூறி, கல்லூரிக்குள் வரும்படி கெஞ்சி கேட்டுக் கொண்டனர். சுமார் 2 மணி நேர சாலை மறியலுக்கு பிறகு மாணவிகள், கல்லூரிக்குள் சென்றனர். ஆனால் வகுப்புகள் செல்லாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் மாணவர்களின் இத்தகைய போராட்டங்கள் எல்லை மீறி போய் கொண்டிருப்பதாக கூறி கண்டனம் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago