எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, அக். - 24 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுகளால் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பலவீனமடைந்து விட்டது என்று மத்திய அமைச்சர் சரத்பவார் கூறி உள்ளார். சமீபத்தில் அரியானா, மராட்டியம், ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களில் இடைத் தேர்தல்கள் நடந்தன. இத்தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மத்திய விவசாய துறை அமைச்சருமான சரத்பவார், மன்மோகன்சிங் அரசு பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒரு நம்பிக்கையான சூழ்நிலையை ஏற்படுத்தியது. எனவே 2009 ம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. ஆனால் தொடர்ந்து ஊழல்களாக வெளியான போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி முரண்பாடுகளில் சிக்கி தவித்தது. 2 ஜி அலைக்கற்றை ஊழலில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் மத்திய தணிக்கை அதிகாரி ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று குறிப்பிட்டார். இந்த அறிவிப்பு மத்திய அரசு பற்றிய மக்களின் எண்ணத்தை மாற்றி விட்டது. இத்தகைய சூழலில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக தெரியவில்லை. இதனால் நீதித்துறையும் மற்றும் உள்ள அமைப்புகளும் தாங்களாகவே ஊர்ஜிதம் செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


