முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: மேலும் 12 பேருக்கு தொடர்பு?

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு, அக். - 25 - 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மேலும் 10 முதல் 12 பேருக்கு தொடர்புள்ளது என்று ஜனதா தள கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  இப்போது நடந்து வரும் 2 ஜி அலைக்கற்றை விசாரணைக்குள் அவர்கள் இன்னமும் வரவில்லை. விசாரணை சரியான நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் சில பிரமுகர்கள் இன்னமும் சி.பி.ஐ. யால் விசாரிக்கப்படவில்லை. விசாரணையின் வரம்புக்குள் அவர்களை கொண்டு வர வேண்டும் என சி.பி.ஐ. யை நான் வலியுறுத்துவேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!