முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி: சிதம்பரத்துக்கு எதிரான சுப்பிரமணிய சுவாமி மனு விசாரணை கோர்ட்டில் தள்ளிவைப்பு

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக். - 25 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் ஒரு துணை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று தள்ளி வைத்தது.  இந்த மனுவை விசாரித்த சி.பி.ஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி சுப்பிரமணிய சுவாமி மனு மீதான விசாரணையை நவம்பர் 8 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.  முன்னதாக இந்த வழக்கில் வாதாடிய சுப்பிரமணிய சுவாமி மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதையும் சுட்டிக் காட்டினார். அதன் பிறகு நீதிபதி ஷைனி, சுப்பிரமணிய சுவாமி மனு மீதான விசாரணையை நவம்பர் 8 ம் தேதிக்கு தள்ளி வைத்தார். முன்னதாக, சுப்பிரமணிய சுவாமி கூறுகையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் விலைகளை நிர்ணயம் செய்ததிலும், நுழைவு கட்டணத்தை நிர்ணயம் செய்ததிலும் முன்னாள் அமைச்சர் ராசாவுக்கும் மற்றும் ப. சிதம்பரத்திற்கும் பங்கு இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அது பற்றிய விவரங்களை இந்த கோர்ட் வரவழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். மேற்கண்ட இரண்டு அமைச்சர்களும்தான் நுழைவு கட்டணத்தையும், ஸ்பெக்ட்ரம் விலைகளையும் ஒன்றாக சேர்ந்து நிர்ணயம் செய்தார்கள். சந்தை விலைக்கு மாறாக இவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர் என்று சுப்பிரமணிய சுவாமி தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 8 ம் தேதி நடைபெறுகிறது. மேலும் நேற்று 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான கனிமொழிக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. அவரது மனு மீதான விசாரணையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே கனிமொழி தீபாவளி பண்டிகையை டெல்லி திகார் சிறையில் கொண்டாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!