முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு- ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.- 31 - பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது பற்றி விபரம் வருமாறு:- மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104-வது பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். சசிகலாவும் தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், விசாலாட்சி நெடுஞ்செழியன், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், சண்முகவேலு, அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, சி.வி.சண்முகம், பச்சைமால், முகம்மது ஜான், டாக்டர் விஜய், செந்தில்பாலாஜி, எஸ்.பி.வேலுமணி, டி.கே.எம்.சின்னய்யா, செந்தமிழன், எடிப்பாடி பழனிசாமி, பி.வி.ரமணா, தென்சென்னை (வடக்கு) மாவட்டச்செயலாளர் வி.பி.கலைராஜன், வடசென்னை (தெற்கு) மாவட்டச்செயலாளர் பாலகங்கா, வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.வெற்றிவேல், மேயர்  சைதை துரைசாமி, துணைமேயர் பி.பெஞ்சமின், எம்.எல்.ஏ.க்கள் பா.வளர்மதி, ராஜலட்சுமி, வ.நீலகண்டன், அசோக், செம்மலை எம்.பி, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார், திருவள்ளூர் மாவட்ட ஒன்றியத்தலைவர் பி.ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் வேளாங்கண்ணி, பி.எஸ்.வாசன், குமரிஅருள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், எஸ்.பி.சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி ஆகியோர் மாலை அணிவித்தனர். காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு, தாமோதரன் ஆகியோரும், தமிழ்மாநில முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஷேக்தாவூது, மாநில தலைமை நிலையச் செயலாளர் ஏ.அஹமதுல்லா பி.முகம்மது அன்சாரி ஆகியோர் மாலை அணிவித்தனர். மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கட்சியின் தலைவர் வை.கோ., இலட்சிய தி.மு.க. சார்பில் டி.ராஜேந்தர், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் சேதுராமன், செயலாளர் இசக்கிமுத்து, பிரபு ஆகியோரும் மாலை அணிவித்தனர்.

ஏராளமான பெண்கள் தேவர் சிலைக்கு அருகே முளைப்பாரியுடன் வந்து கும்மி அடித்தனர். ஏராளமான தேவர் அமைப்புகளும் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony