அண்ணா ஹசாரேயை குழுவினர் கறுப்பு ஆடாக பயன்படுகிறார்கள்

Image Unavailable

புதுடெல்லி,நவ.- 7 - அண்ணா ஹசாரேயை அவரது குழுவில் இடம்பெற்றுள்ள சில உறுப்பினர்கள் தங்களுடைய அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அவரை கறுப்பு கடாவாக்குகிறார்கள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார். அண்ணா ஹசாரே மற்றும் அவரது குழுவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. அண்ணா ஹசாரே குழுவில் உள்ளவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். அண்ணாஹசாரே குழுவில் இடம் பெற்றிருக்கும் ஒரு சில முக்கிய புள்ளிகள் தங்களுடைய அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஹசாரேயை கறுப்பு ஆடாக்கி வருகிறார்கள். நான் சொன்ன வார்த்தைபடி நடக்கிறேன். ஹசாரே குறித்த என் கருத்தை காங்கிரஸ் தலைவர்களும் பகிர்ந்துகொண்டுள்ளனர் என்று கூறிய திக்விஜய் சிங் என் கருத்து குறித்து சோனியா மற்றும் ராகுல் காந்தியுடன் விவாதிக்க வில்லை என்றார். பலமான லோக்பால் மசோதாவை கொண்டுவராவிட்டால் காங்கிரசுக்கு எதிராகத்தான் பிரசாரம் செய்வேன் என்று ஹசாரே கூறியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது,அவர் முன்பு அறிவித்ததற்கு எதிராக உள்ளது என்றும் திக்விஜய் சிங் கூறினார். முன்பு எந்த கட்சிக்கும் எதிராக பிரசாரம் செய்யப்போவதில்லை என்று முதலில் ஹசாரே கூறினார். தற்போது அதை ஹசாரே மாற்றிக்கொண்டுவிட்டார். ஹசாரே மிகவும் எளிமையானவர். அதேசமயத்தில் அவரை சுற்றியுள்ளவர்கள் ஹசாரேயை தங்களுடைய அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே பயன்படுத்துகிறார்கள். இது ஹசாரேவுக்கு தெரியவில்லை என்றும் திக்விஜய் சிங் கரன் தாபர் நிகழ்ச்சிக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ