முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்னோ மருத்துவமனைகளில் சி.பி. ஐ. அதிரடி சோதனை

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ, நவ.- 7- லக்னோவில் உள்ள சில முக்கிய மருத்துவமனைகளில் சி.பி. ஐ.அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சில மருத்துவ மனைகளில் தேசிய கிராமப்புற சுகாதார நிதியை  தவறான முறையில் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக லக்னோவில் உள்ள சில தனியார் மற்றும்  தொண்டு நிறுவன மருத்துவ மனைகளில்  நிதி முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதை அடுத்து  மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ.க்கு தகவல் கொடுக்கப்பட்டது. டெல்லியிலிருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் குழு ஒன்று நேற்று காலை லக்னோ வந்து சேர்ந்தது. லக்னோவில் உள்ள தனியார் மற்றும்  தொண்டு நிறுவன மருத்துவமனைகளில் அவர்கள் திடீர்  சோதனை நடத்தினார்கள்.
குறிப்பாக 10 கண் மருத்துவ மனைகளில் இந்த சோதனைகள் நடந்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் கூறின.
நேற்று காலை 10 மணிக்கு துவங்கிய இந்த  சோதனைகள் மாலை வரை நீடித்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.
இந்த சோதனையின்போது என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago