எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, நவ. - 12 - தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவராக ஞானசேகரன் எம்.எல்.ஏ தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க. முக்கிய இடம் பிடித்து வருகிறது. இந்நிலையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு சம்பந்தமாக நிகழ்ந்த முறைகேட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை குற்றம் சுமத்தியதன் எதிரொலியாக மத்திய தொலைத் தொடர்பு துறை தி.மு.க. அமைச்சராக இருந்த ஆ. ராசா, மற்றும் தி.மு.க. எம்.பி கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். 2 ஜி விவகாரத்தை அடுத்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணியிடையே விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு பிரச்சினையும் ஏற்பட்டது. தேர்தல் முடிவில் காங்கிரஸ் தமிழகத்தில் தோல்வியையும் சந்தித்தது. அதோடு மட்டுமல்லாது சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி காங்கிரசாரிடையே பெரும் அமளியே ஏற்பட்டுப் போனது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தையும் கட்சி மேலிடத்தில் அளித்ததாக கூறப்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் தமிழகத்தில் படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழக காங்கிரஸ் தலைவராக ஞானசேகரன் எம்.எல்.ஏவை தேர்வு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


