எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.19 - தமிழக காவல் துறையின் 51-வது மாநில தடகள போட்டி நேரு அரங்கில் நவ.14 முதல் நவ.16 வரை நடைபெற்றது. வெற்றிபெற்றவர்களுக்கு டி.ஜி.பி. ராமானுஜனம் பரிசளித்து பாராட்டினார். இது பற்றி விபரம் வருமாறு:-
தமிழக காவல் துறையின் 51-வது மாநில தடகள போட்டிகள் சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் கடந்த நவ.14 முதல் நவ.16 வரை கோலாகலமாக நடைபெற்றன. போட்டிகளை செம்மையாக நடத்துவதற்காக ஆயுதப்படை காவல்துறை கூடுதல் இயக்குநர், நரேந்திரபால்சிங், ஆயுதப்படை காவல்துறைத்தலைவர் பிரமோத்குமார் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களால் விழாவிற்கான ஏற்பாடுகள் திறம்பட செய்யப்பட்டன.
இப்போட்டிகளை காவல்துறை இயக்குநர் (பயிற்சி) லத்திகா சரண் நவ.14 அன்று காலை 8.00 மணிக்கு துவக்கி வைத்தார். தமிழக காவல் துறையைச் சேர்ந்த சென்னை காவல் வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தமிழ்நாடு அதிரடிப்படை மற்றும் பயிற்சி மற்றும் ஆயுதப்படை ஆகிய ஏழு காவல் மண்டல அணிகளைச் சேர்ந்த ஆண் மற்றும் ஆயுதப்படை ஆகிய ஏழு காவல் மண்டல அணிகளைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சுமார் 423 நபர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
இப்போட்டியில் பல்வேறு புதிய சாதனைகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பெண் சார்பு ஆய்வாளர் பயிற்சி தமிழ்செல்வி என்பவரும், பெண்களுக்கான 1500 மீ ஓட்டப்பந்தயத்தில் ஆயுதப்படையைச் சேர்ந்த பெண் அவில்தார் 1910 ரேவதி என்பவரும், ஆண்களுக்கான நிளம் தாண்டுதலின் போட்டியில் ஆயதப்படையைச் சேர்ந்த நாயக் 3523 சுரேஷ் என்பவரும், 800 மீ ஓட்டப்பந்தயத்தில் ஆயதப்படையைச் சேர்ந்த நாயக் 2051 ஜெயராஜ் என்பவரும், 20 கி.மீ நடை பந்தயத்தில் ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் 3834 வினோத் குமார் என்பவரும், புதிய மாநில சாதனைகள் படைத்துள்ளனர்.
ஒட்டுமொத்த ஆண்களுக்கான தனிநபர் சாம்பியன்ஷிப் பரிசினை 19 புள்ளிகள் பெற்று ஆயுதப்படையை சேர்ந்த காவலர் 1546 வீரமணி என்பவரும், ஒட்டு மொத்த பெண்களுக்கான தனிநபர் சாம்பியன்சிப் பரிசினை 31 புள்ளிகள் பெற்று சென்னை பெருநகரத்தை சேர்ந்த காவலர் 32650 தமிழரசி என்பவரும் பெற்றுள்ளனர். ஆண்களுக்கான ஒட்டுமொத்த அணிகளுக்கான சாம்பியன்சிப் பட்டத்தினை 224 புள்ளிகளை பெற்று ஆயுதப்படையும், பெண்களுக்கான ஒட்டுமொத்த அணிகளுக்கான சாம்பியன்சிப் பட்டத்தினை 134 புள்ளிகளை பெற்று சென்னை பெருநகர் முதலிடத்தையும், ஒட்டுமொத்த சாம்பியன்சிப் பட்டத்தினை 338 புள்ளிகள் பெற்று ஆயுதப்படையினர் தட்டிச் சென்றனர்.
நவ.16 அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் கே.ராமானுஜம், தலைமை விருந்தினராக பங்கேற்று, சிறப்புரையாற்றி வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளும், ஒட்டுமொத்த அணிக்கு கேடயமும் வழங்கி சிறப்பித்தார்.
ஆயதப்படை காவல்துறை கூடுதல் இயக்குநர் நரேந்திரயில் சிங் வரவேற்பரை வழங்கினார். இதனை தொடர்ந்து ஆயுதப்படை காவல்துறை தலைவர், பிரமோத்குமார் நன்றியுரை வழங்கி சிறப்பித்தார்.
நிறைவு நாளான நவ.16 அன்று தமிழ்நாடு சிறப்பு காவல் 3-ம் அணியை சேர்ந்த சுமார் 90 ஆண் மற்றும் பெண் காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது.
இவ்விழாவில் காவல்துறை கூடுதல் இயக்குநர்களும், காவல்துறை தலைவர்களும், காவல்துறை துணைத் தலைவர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


