எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாலி, நவ.19 - சீன பிரதமர் வென்ஜியாபாவோவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார். இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆசியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்களும், சிறப்பு அழைப்பாளர் நாடுகளின் தலைவர்களும் குவிந்துள்ளனர். இந்த உச்சி மாநாட்டின் ஒரு புற நிகழ்வாக நேற்று சீன பிரதமர் வென்ஜியாபாவோவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். பரஸ்பர பலன்களுக்காக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒத்துழைப்பு நல்குவதற்கு போதுமான துறைகள் உள்ளன என்றும், இந்த துறைகளில் இரு நாடுகளும் ஒன்று சேர்ந்து செயல்படும் என்றும் இரு தலைவர்களும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். சீனாவுடன் சிறந்த நட்புறவை வளர்த்துக்கொள்ளவே இந்தியா விரும்புகிறது என்று மன்மோகன் சிங் கூறினார். 21 ம் நூற்றாண்டு ஆசியாவின் வசம் என்பதை உறுதி செய்யும் வகையில் இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்று வென்ஜியாபாவோ குறிப்பிட்டார். நம் இரு தேசங்களும் அண்டை நாடுகள். அதுமட்டுமல்ல, ஆசியாவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மிகப்பெரிய நாடுகள் நம்நாடுகள்தான். எனவே நம்மிரு நாடுகளும் இருதரப்பு மற்றும் சர்வதேச விஷயங்களில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் வென்ஜியாபோ தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக எந்தெந்த துறைகளில் எல்லாம் இந்தியாவும் சீனாவும் ஒன்றுசேர்ந்து செயல்பட்டதோ அந்த துறைகளில் எல்லாம் உலக அளவில் சாதகமான பலன்களையே பெற்றுள்ளன என்று மன்மோகன் சிங் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


