கட்சியை வலுப்படுத்த ராகுல் வியூகம்

Image Unavailable

புது டெல்லி, நவ.20- காங்கிரசை வலுப்படுத்த டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் மாநாடு நடத்த ராகுல் திட்டமிட்டுள்ளார்.  வருங்காலத்தில் காங்கிரசை வலுப்படுத்த இளம் வீரராக ராகுல் உருவாகி வருகிறார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஏழை மக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து கொண்டார். விவசாயிகளையும் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார். தான் வெற்றி பெற்ற அமேதி தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதோடு அவர்களுக்கு உதவியும் செய்து வருகிறார். தற்போது உ.பி. தேர்தலில் ராகுல் முழு கவனம் செலுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அடுத்த கட்டமாக இளைஞர் காங்கிரசில் ஏராளமான உறுப்பினர்கள் கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சி வருகிறார். இதையடுத்து முதல் முறையாக டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநாடு நடத்த ராகுல் திட்டமிட்டுள்ளார். இம்மாத கடைசியில் இரண்டு நாட்களுக்கு இம்மாநாடு நடைபெறுகிறது. இதில் ராகுலோடு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். எதிர்காலத்தில் காங்கிரசை வலுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இம்மாநாட்டில் ஆலோசிக்கப்படவிருக்கிறது. மாநாட்டுக்கு ஒரு கோடி இளைஞர்களை திரட்டும் வகையில் ராகுல் வியூகம் அமைத்துள்ளார். இது குறித்து நேற்று டெல்லியில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகத்துக்கு திடீரென சென்று நிர்வாகிகளை சந்தித்து பேசினார். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்திய அவர் எம்.எல்.ஏக்கள், வட்டார தலைவர்கள் மற்றும் 7 எம்.பிக்களை கலந்து கொள்ள செய்தார். இளைஞர் காங்கிரஸ் பலப்படுத்தப்படுவதன் மூலம் அடுத்து வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முழுவீச்சில் சந்திக்கலாம் என்ற திட்டத்துடன் ராகுல் வியூகம் அமைத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ