முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை சி.பி.ஐ. நீதிபதி அதிரடி தீர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,நவ. 20- 1996 ம் ஆண்டில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு காண்டிராக்ட் கொடுப்பதற்காக ரூ. 3 லட்சம் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஆர்.பி. பாண்டே இந்த உத்தரவை பிறப்பித்தார்.மேலும் 86 வயதான சுக்ராமுக்கு இந்த வழக்கில் ரூ. 4 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை பெற்றுள்ள சுக்ராம் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தண்டனை பற்றி சி.பி.ஐ. வழக்கறிஞர் கூறுகையில், தண்டனை பெற்ற சுக்ராம் உடனடியாக காவலில் எடுக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் சுக்ராம், தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ரூ. 30 கோடி பெறுமான காண்டிராக்ட்டை அரியானா டெலிகாம் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு கொடுத்த விஷயத்தில் இவர் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது சுக்ராம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தனது கட்சிக்காரருக்கு வயது 86 என்றும், கடந்த 12 அல்லது 13 ஆண்டுகளாக அவர் விசாரணையில் பங்கேற்று வருகிறார் என்றும் மேலும் அவருக்கு வயதாகி விட்ட காரணத்தால் வியாதிகளால் அவதிப்படுகிறார் என்றும் தனது வாழ்க்கையையே அவர் இழந்து விட்டார். எனவே அவருக்கு கருணை காட்டுங்கள் என்றும் வாதாடினார். ஆனால் சி.பி.ஐ. வழக்கறிஞர் இதை ஏற்கவில்லை. அவர் இரண்டு வழக்குகளில் குற்றவாளி. எனவே அவருக்கு கருணை காட்டக் கூடாது என்று வாதாடினார். மேலும் அவர் ஒரு எம்.பியாக இருந்தவர். அமைச்சராகவும் இருந்தவர். பொதுமக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர். அதை மறக்கவே கூடாது என்று சி.பி.ஐ. வழக்கறிஞர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பாண்டே சுக்ராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் 1998 ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரியானா நிறுவனத்தின் சேர்மன் தேவேந்திரசிங் சவுத்ரி விசாரணையின் போதே மரணமடைந்து விட்டார். 2009 ம் ஆண்டு சுக்ராம் மீது சொத்து குவிப்பு வழக்கும் தொடரப்பட்டது. தண்டனை பெற்ற சுக்ராம் காங்கிரசில் இருந்து ஒரு கட்டத்தில் நீக்கப்பட்டவர். இவர் 7 முறை எம்.எல்.ஏவாகவும், மூன்று முறை எம்.பியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நரசிம்மராவ் அமைச்சரவையில்தான் இவர் தொலைத் தொடர்பு இலாகாவை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago