முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேம் 999 பட விவகாரம்: பார்லி.யில் வெடித்தது

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 24 - முல்லைப் பெரியாறு அணை உடைவது போல சித்தரிக்கும் டேம் 999 என்ற ஆங்கில படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று பாராளுமன்ற லோக்சபையில் தி.மு.க.வினர் நேற்று பிரச்சினை எழுப்பினார்கள்.  முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு தலைமையில் தி.மு.க. எம்.பிக்கள் சபையின் மையப் பகுதிக்கு விரைந்து அது தொடர்பாக வெளியான பத்திரிக்கை செய்திகளை காட்டி பிரச்சினை எழுப்பினர். டேம் 999 படம் முல்லைப் பெரியாறு அணையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள விவகாரம். அது தற்போது கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் போது இப்படம் வெளியாகவிருப்பதையும் தி.மு.க. உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினர். இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். பல்வேறு பிரச்சினைகளால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு டி.ஆர். பாலுவை பிரதமர் மன்மோகன்சிங்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவும் அழைத்து டேம் 999 பட விவகாரம் குறித்து கேட்டறிந்தனர். அது பற்றி அவர்கள் விவாதித்ததாகவும் தெரிகிறது. பின்னர் டி.ஆர். பாலுவிடம் இருவரும் இந்த விவகாரம் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனியிடம் பேசுவதாகவும் உறுதியளித்தனர். இந்த படம் வெளியாவதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் போன்ற தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago