முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்னதிரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக ராதிகா தேர்வு

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ.30 - தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் டி.வி. சங்கர் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் நடிகை ராதிகா சரத்குமார் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கூட்டத்தில் மெகா டி.வி. நிறுவனத்தில் தொடர் தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு சேரவேண்டிய பணம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதை கண்டித்து, மேற்படி நிறுவனத்துக்கு தொழில்முறை ஒத்துழைப்பு தருவதில்லை என்று தமிழ்நாடு சின்னதிரை தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்து கடிதம் அனுப்பி இருந்தது.

இந்த முடிவுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் யூனியன் ஆகிய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. அவர்களுக்கு நன்றி தெரிவித்து, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் தலைர் ராதிகா சரத்குமார் பேசும் போது மெகா டி.வி. தொடர்பான பிரச்சினை தீரும்வரை மேற்படி ஆதரவை தொடர்ந்து அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago