முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் கைதிகள் விடுதலை

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

டமாஸ்கஸ், டிச.3 - கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர சிரியாவில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.  சிரியா அதிபர் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. எனவே கலவரத்தை அடக்க ராணுவம் சுட்டதில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர அரபு யூனியன் நாடுகள் சிரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது தான் பதவி விலக அதிபர் ஆசாத் ஒப்புக் கொண்டார். 

அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளும், சிரியா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதற்கிடையே ஆசாத்தை பதவி விலக கோரி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சிறை கைதிகளை சிரியா அரசு விடுதலை செய்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட 1,700 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் டமாஸ்கஸ் நகர சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்