எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், டிச.3 - மருந்து பார்முலா திருடியதாக இந்திய விஞ்ஞானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லோகன்நகரில் வசிப்பவர் பிரபு மகோபத்ரா(42). இவர் பிராண்டியர் சயிண்டிபிக் என்ற கம்பெனியில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். இந்நிலையில் இந்த கம்பெனியில் இருந்து ரசாயனங்கள், பார்முலாக்கள் பற்றிய ரகசியங்களை திருடி இந்தியாவில் உள்ள தனது மைத்துனருக்கு இ மெயில் மூலம் அனுப்பி உள்ளார். பிரபுவின் மைத்துனர் இந்தியாவில் ரசாயன கம்பெனி வைத்துள்ளார். இதை கம்பெனியில் பணிபுரியும் மற்றொருவர் கண்டுபிடித்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கம்பெனியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், குறிப்பிட்ட ரசாயனம் எங்களது கம்பெனியை தவிர உலகிலேயே வேறு கம்பெனியில் கிடையாது. பிரபு லேப்டாப் மூலம் இதனை அனுப்பியதை கம்பெனி நபர் ஒருவர் பார்த்துள்ளார். இது குறித்து பிரபுவிடம் விசாரணை நடத்தினோம். அவர் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டார். எனினும் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார். கம்பெனி ரகசியங்களை திருடியது நிரூபிக்கப்பட்டால் பிரபுவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று அரசு வக்கீல் ஒருவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


