Idhayam Matrimony

சீனாவின் ராணுவ வலிமை குறித்து இந்திய உஷாராக இருக்கிறது - நிரூபமராவ்

புதன்கிழமை, 7 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,டிச.- 8 - சீனாவின் ராணுவ வலிமை குறித்து இந்தியா மிகவும் உஷாராக இருக்கிறது என்று முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரும் அமெரிக்காவுக்கான இந்திய தூதருமான நிரூபமாராவ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா,ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ்,ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக சீனா ராணுவத்தில் வலிமை பெற்று வருகிறது. இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தியாவுடன் உறவு வைத்துக்கொண்டே கடந்த 1962-ம் ஆண்டு போர் தொடுத்து நாட்டின் 12 லட்சம் சதுரகிலோ மீட்டர் பரபரப்பளவு உள்ள நிலத்தை ஆக்கிமித்து வைத்துள்ளது. இதை கருத்தில் கொண்டும் சீனாவின் ராணுவ வலிமை அதிகரித்து வருவது குறித்தும் இந்தியா உஷாராகவே இருக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா-பெர்கிலி பல்கலைக்கழகத்தில் உரையாற்றும்போது நிரூபமாராவ் தெரிவித்தார். அந்த நாட்டுடன் இந்தியா உறவு கொண்டாடி வருகிறது. அதேசமயத்தில் உஷாராகவும் இருக்கிறது என்றார். இந்தியாவின் பெரிய அண்டை நாடாகும் சீனா. அந்த நாட்டுடனான உறவு குறித்து நான் எதுவும் குறைத்துக்கூறவோ அல்லது வேறுபடுத்திக்கூறவோ விரும்பவில்லை என்றார். கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தையை அதிகப்படுத்தி வருவதோடு இருதரப்பு உறவும் பலம் அடைந்து வருகிறது. இந்தியாவின் வர்த்தகத்தில் சீனா பெரும் பங்கு வகிக்கிறது. இருநாடுகளின் எல்லைப்பகுதியில் அமைதி நிலவுகிறது. அதேநேரத்தில் சீனாவின் ராணுவ பலம் அதிகரிப்பு, ராணுவ நவீனமயமாக்குதல் ஆகியவைகளால் இந்தியா உஷாராக இருக்க வேண்டும் என்று நிரூபமா ராவ் மேலும் கூறினார். அவர் ஆற்றிய உரை, வாஷிங்டன்னில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து வெளியிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago