முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலாளர் தற்கொலை: நடிகர் வடிவேலு மீது சந்தேகம்

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.- 8 - நடிகர் வடிவேலுவால் தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்றும், இது குறித்து சிறப்பு போலீஸ் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை ஐகோர்ட்டில் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பாண்டீஸ்வரி என்ற பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நடிகர் வடிவேலுவிடம் தனது கணவர் வேலுசாமி மேனேஜராக வேலை பார்த்து வந்தார். அவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். எனது கணவரை நடிகர் வடிவேலு கொலை செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்படுகிறேன். கருணாநிதி மற்றும் அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர் நடிகர் வடிவேலு. கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு குற்றங்களை செய்திருக்கிறார். இது தொடர்பான வழக்கு விபரங்களை பின்னர் வழங்குகிறேன். காவல்துறை மற்றும் நீதித்துறைகளை நடிகர் வடிவேலு தவறாக பயன்படுத்தி வந்தார். எனது கணவர் மரணம் குறித்து வடபழனி போலீசார் மர்ம சாவு என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனது கணவரை நடிகர் வடிவேலு கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என 19.8.2011-ல் போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து எனக்கும், என் மகனுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தவண்ணம் உள்ளது. பள்ளிக்கூடம் போகும் எனது மகன்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். எனது புகார் குறித்து புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையை கோர்ட் நேரடியாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மிக விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony