எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி.டிச.- 21 - பாராளுமன்றத்தின் லோக் சபையில் நேற்று காலை கூடியதும் கேள்வி நேரத்தின் போது கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்ல மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எழுந்த போது பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எழுந்து சிதம்பரத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிதம்பரத்திற்கும் பங்கு உண்டு என்றும் அதனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரி கோஷமிட்டனர். மேலும் மோசடி வழக்கு ஒன்றில் தப்பிக்க டெல்லி ஓட்டல் உரிமையாளர் ஒருவருக்கு சிதம்பரம் தனது அதிகாரத்தைவறாக பயன்படுத்தியிருக்கிறார் என்றும் எனவே அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்களின் அமளியால் லோக் சைபயில் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதே போல ராஜ்ய சபையிலும் சிதம்பரத்திற்கு எதிராக பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர். சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி அவர்கள் சிதம்பரத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் ரஷ்யாவில் பகவத் கீதைக்கு தடை விதிக்கும் முயற்சிகளுக்கு பா.ஜ.க.எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதை அடுத்து சபை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
பிறகு மீண்டும் சபை கூடிய போதும் இதே நிலை காணப்பட்டதால் சபையை பிற்பகல் 2 மணி வரை சபை தலைவர் ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


