முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் குறைகிறது

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

ஆண்டிபட்டி டிச-30 - நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் பெரியார் மற்றும் வைகை அணையின் நீர்மட்டம் குறைகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களாக மழை பொழிவு இல்லாததால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.; மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் கொட்டக்குடி ஆறு, பெரியாறு, வருசநாட்டு மலைப்பகுதிகளின் வழியாகவரும் நீரின் அளவு குறைந்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம. 67.04 கனஅடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 1288 கனஅடியாகவும் நீர்; வெளியேற்றம் 1962 கனஅடியாகவும் நீர்; இருப்பு 5098 கனஅடியாகவும் உள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.70 அடியாகவும், அணையின் நீர் வரத்து 457 கனஅடியாகவும் நீர் வெளியேற்றம் 1512 கனஅடியாகவும் அணையின் நீர் இருப்பு 3769 கனஅடியாகவும் ஆகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!