முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் மனைவி மரணம்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

ஐதராபாத், டிச.31 - பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் மனைவி அன்னபூரணி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். பிரபல தெலுங்கு நடிகர் பத்மவிபூஷன் மற்றும் தாதாசாகிப் விருதுபெற்ற நாகேஸ்வரராவ் மனைவி அன்னபூரணி. 1949ம் வருடம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் திருமணத்திற்கு பிறகு தான் நாகேஸ்வரராவுக்கு திரையுலகில் வாய்ப்புகள் குவிந்தன. ஐதராபாத்திலேயே பிரபலமான படப்பிடிப்பு நிலையங்களில் அன்னபூர்ணா ஸ்டுடியோவும் ஒன்று. 

கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அன்னபூர்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணம் குறித்த தகவல் அறிந்ததும் திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். நடிகர் சிரஞ்சீவி தனது மனைவி சுரேகாவுடன் வந்திதருந்து அன்னபூர்ணா உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். அன்னபூர்ணா மரணம் தெலுங்கு திரையுலகத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!