எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்கால், டிச. 31 - காரைக்கால் மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் தானே புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை சென்று பார்வையிட்டார். மேலும் மீனவ கிராமங்களான காசாகுடி, கிளிஞ்சன் மேடு, காரைக்கால் மேடு ஆகிய பகுதிகளுக்கு கடல் அரிப்பால் நீர் புகுந்த பகுதிகளையும், புயலால் பாதிக்கப்பட்ட படகுகள் மற்றும் சேதமடைந்த மீன் வலைகள், குடிசைகள் ஆகியவற்றை எம்.எல்.ஏ திருமுருகன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்,
தானே புயல் சீற்றத்தால் மீனவ கிராமங்களான காசாகுடிமேடு, கிளிஞ்சல் மேடு, காரைக்கால் மேடு ஆகிய பகுதிகளில் குடியிருப்பு வரை கடல் நீர் புகுந்துள்ளது. இதனால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், மீன் வலைகள் மற்றும் குடிசைகள் சேதம் அடைந்துள்ளது. இதே நிலை இயற்கை சீற்றத்தினால் மேலும் தொடராமல் இருக்க புதுவை அரசு உடனடியாக கருங்கல் கொட்டி கடல் நீர் அரிக்காதவண்ணம் திருப்பு அணை அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் வடக்கு தொகுதியில் உள்ள குடிசை பகுதியில் மழை நீர் புகுந்துள்ளது. அறுவடைக்காக காத்திருக்கும் பல ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. எனவே போர்க்கால அடிப்படையில் தானே புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் பகுதி மக்களுக்கு உடனடி நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


