முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தானே புயல் தாக்குதலில் நடுக்கடலில் நின்ற சரக்கு கப்பல்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.31 - தானே புயல் தாக்குதலின் கோரத் தாண்டவத்தால், நடுக்கடலில் நின்ற சரக்கு கப்பல் சென்னை மெரீனா கடற்கரை அருகே தரை தட்டி நிற்கிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து செல்கிறார்கள். தானே புயல் காற்று பலமாக வீசியதால் சென்னையில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த சரக்குக் கப்பல் புயல் அலையால் கரைக்கு இழுத்து வரப்பட்டது. இது மெரீனாவில் தரை தட்டி நின்றது. தானே புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே அறிந்து சென்னை துறைமுகத்திற்கு வந்திருந்த 20 சரக்கு கப்பல்களை அதிகாரிகள் நேற்று நடுக்கடலுக்கு திருப்பி அனுப்பினர்.இதன்படி சரக்கு ஏற்றி வந்த கப்பல்களும், சரக்குகளை இறங்கி நின்ற கப்பல்களும் நடுக்கடலில் நங்கூரம் இறங்கி நிறுத்தப்பட்டு இருந்தது.   நேற்று காலை புயல் காற்று பலமாக வீசியதால் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு கப்பல் அலையில் மிதந்து கரைக்கு இழுத்து வரப்பட்டது. மெரீனா கடலில் நேப்பியர் பாலம் அருகே உள்ள மதகு பகுதியில் அந்த கப்பல் தரை தட்டி நிற்கிறது. எம்.ஜி.ஆர். சமாதி, அண்ணா சமாதிக்கு வந்த பொதுமக்கள் கப்பல் தரை தட்டி நிற்பதை கூட்டம் கூட்டமாக நின்று பார்த்து செல்கின்றனர். காற்று அதிகம் வீசுவதால் கப்பலை கடலுக்குள் இழுக்க முடியவில்லை. இதனால் அங்கேயே கப்பல் நிற்கிறது. கடல் சீற்றம் தணிந்த பிறகே கப்பலை மீட்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!