முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி:மதுரையில் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஜன.- 8 - முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாபற்றி நக்கீரன் தமிழ் வாரப்பத்திரிகையில் நேற்று அவதூறு செய்தி வெளியானது. இதை பார்த்த அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் கொதித்தெழுந்தனர். அந்த வார பத்திரிகையை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில்  கடைகளில் விற்பனைக்கு இருந்த அந்த வார பத்திரிகைகள் அனைத்தையும் வாங்கி தீவைத்து எரித்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. ஆகியோர்  தலைமையில் அந்த பத்திரிகையை தீவைத்து எரித்தனர். அப்போது எதிர்ப்பு கோஷங்களையும் அ.தி.மு.க.வினர் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் கோபாலகிருஷ்ணன், அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டியன், பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மண்டலத் தலைவர்கள் பெ.சாலைமுத்து, கே.ஜெயவேல், மு.இராஜபாண்டியன், கே.ராஜபாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், தொகுதி செயலாளர் எஸ்.குமார், தொகுதி இணைச் செயலாளர் கிரம்மர் சுரேஷ், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி, பகுதிக்கழக செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், பூமிபாலகன், செ.ஜெயபால், கவுன்சிலர் கேசவபாண்டியம்மாள், தெற்கு 3 ம் பகுதி இளைஞரணி செயலாளர் முத்திருளாண்டி, வக்கீல் ரமேஷ், வட்டச் செயலாளர்கள் ஏ.காஜா, சக்திவிநாயகர் ஆர்.பாண்டி, முக்கூரான், எம்.தேவதாஸ், எம்.ஜி.ஆர்.மன்ற துணைத்தலைவர் டி.எஸ்.பி.முத்துச்சாமி, மதுரைவீரன் பழக்கடை தமிழ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

மதுரை அவுட்போஸ்ட் டாக்டர் அம்பேத்கார் சிலை  முன்பு வடக்கு தொகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் வக்கீல் ஏ.பி.பாலசுப்பிரமணியம் தலைமையில் அ.தி.மு.க.வினர் வார இதழை கண்டித்து கொடும்பாவி எரித்தனர். இதில் வழக்கறிஞர்கள் கே.ரமணி, முத்துக்குமார், இளமன், ராமகிருஷ்ணன், புதூர் ஆனந்தஜோதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். புதூர் பஸ் நிலையம் அருகே மதுரை மாநகர் மாவட்ட பேரவை துணைத் தலைவரும் கவுன்சிலருமான புதூர் அபுதாஹிர், வட்டச் செயலாளர் கார்த்திக் முனியசாமி, சம்பக்குளம் ஆழ்வார் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் வார இதழ்களை தீயிட்டு கொளுத்தினர். பெரியார் பஸ்நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே கவுன்சிலர் கு.திரவியம் தலைமையில் பரவை பேருராட்சித் தலைவர் ராஜா மற்றம் அ.தி.மு.க.வினர் நக்கீரன் இதழை தீயிட்டு எரித்தனர். 

மதுரை வெற்றிலைப்பேட்டை எம்.ஜி.ஆர்.சிலை முன்பு மாவட்ட பேரவை செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷ.ராஜலிங்கம் ஆகியோர் தலைமையில் வார இதழை தீயிட்டு கொளுத்தினர். இதில் மாவட்ட மீனவரணி செயலாளர் வில்லாபுரம் விஜயகுமார், கறிக்கடை முருகேசன், கவுன்சிலர் நூர்முகமது, வட்டச் செயலாளர் ஏ.ராஜாமுகமது உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் எதிரே வடக்கு 1 ம் பகுதிக் கழக செயலாளர் அண்ணாநகர் எம்.என்.முருகன் தலைமையில் வார இதழை தீவைத்து எரித்தனர். இதில் வட்டச் செயலாளர்கள் ஏ.முத்துச்சாமி, தங்கப்பாண்டி, கவுன்சிலர் சுசீந்திரன், மானகிரி மகாதேவன், மானகிரி பாண்டி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் எதிரே வட்டச் செயலாளர் புதூர் கே.எம்.கண்ணன் தலைமையில் இளைஞரணி செயலாளர்  விஜி என்ற  விஜயசேகர், பாசறை செயலாளர் ரவி, மாவட்ட பிரதிநிதி அம்பிகா நாச்சியப்பன், அவைத்தலைவர் மருதுபாண்டி மற்றும் அ.தி.மு.க.வினர் வார இதழை தீவைத்து கொளுத்தினர். 

மதுரை மத்திய 2 ம் பகுதிக்கழக செயலாளர் தளபதி ஆர்.மாரியப்பன் தலைமையில் மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் வார இதழை அ.தி.மு.க.வினர் தீவைத்து எரித்தனர். பின்னர் தளபதி ஆர்.மாரியப்பன் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேதாஜி ரோட்டில் உள்ள நக்கீரன் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த அலுவலகத்தில் உள்ள வார இதழ்கள் மற்றும் அந்தப் பகுதிக் கடைகளில் இருந்த வார இதழ்கள் அனைத்தையும் சேகரித்து தீவைத்து எரித்தனர். இந்த போராட்டத்தில் வட்டச் செயலாளர்கள் சுவீட்ஸ்டால் சுப்பையா, நாகேந்திரன், கவுன்சிலர் சித்திரைஜோதி, அலியார், திலகர், ஐயப்பன், மாயாண்டி, தமயந்தி உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்துகொண்டனர். மதுரை முனிச்சாலை பகுதியில் கிழக்கு மண்டலத் தலைவரும் தெற்குப் பகுதிக் கழக செயலாளருமான மு.இராஜபாண்டியன் தலைமையில் அழ.பாண்டி, ராமநாதன், கோவிந்தசாமி, எம்.ஜி.ஆர்.நாகராஜன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் வார இதழினை தீயிட்டு கொளுத்தினர். பழங்கானத்தம் பகுதியில் பகுதிக்கழக செயலாளரும் தெற்கு மண்டலத் தலைவருமான பெ.சாலைமுத்து தலைமையில் அ.தி.மு.க.வினர் வார இதழ்களை தீயிட்டு கொளுத்தினர். மதுரை மாநகர் மாவட்ட பாசறை செயலாளர் டி.வினோத்குமார் தலைமையில் பாசறை நிர்வாகிகள் வி.எஸ்.பிரசன்ன குமார், ஜெயந்தி, மகேஸ்வரன், முருகன், செல்வராஜ், பழனிவேல், சதாம், விஜயகுமார், மணி, சங்குராஜா உள்ளிட்ட பாசறை நிர்வாகிகள் வார இதழை தீவைத்து எரித்தனர்.  

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை, அய்யர் பங்களா ஆகிய இடங்களில் கே.தமிழரசன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒன்றியச் செயலாளர்கள் தக்கார் பாண்டி, எம்.முருகேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், வக்கீல் தி.கோபி, ஆனையூர் ஐயப்பன், அஜீஸ், ரவி, பிரதாப் மற்றும் அ.தி.மு.க.வினர் அவதூறு செய்தி வெளியிட்ட வார இதழ்களை தீவைத்து எரித்தனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!