முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பென்னிகுக் நினைவாக மணிமண்டபம் ஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டு

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

சென்னை, ஜன.- 9 - முல்லை பெரியாறு அணையை தன் சொந்த செலவில் கட்டி முடித்த இங்கிலாந்து நாட்டு என்ஜினியர் பென்னிகுக்கு நினைவை போற்றும் வகையில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- முல்லை பெரியார் அணையைக் கட்டிய ஆங்கிலேயர் பென்னிகுக் லோயர் கேம்பில் ரூபாய் ஒரு கோடி செலவில் சிலையும் மணிமண்டபமும் அமைக்க இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. 1887-ல் கட்டத்துவங்கி 1895-ல் கட்டி முடிக்கப்பட்டது. கட்டத்துவங்கியபின் நிதி பற்றாக்குறையால் அணை பாதியிலேயே நின்று விட்டதையறிந்த அந்த கட்டுமான பொறியாளர் மிகவும் வருந்தி இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துக்களை விற்று அதன்மூலம் கிடைத்த பணத்தில் முல்லை பெரியார் அணையைக் கட்டி கலந்து நீரை அணை கட்டியதன் மூலம் அதை கிழக்கே திருப்பி விடப்பட்டு, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கும், குடிநீர்பிரச்சினையையும் தீர்த்துவைத்த ஆங்கிலேயர் பென்னிகுக் அவர்களுக்கு சிலையும், மணிமண்டபமும் அமைப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதற்கு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முல்லை பெரியார் அணைப்பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையில் இந்த சமயோசித முடிவு, கருத்துவேற்றுமை நீங்கி நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமான நல்லினக்கத்துடன் வாழ வழிவகுக்கும் என்பது உறுதி. பொதுவாக மணிமண்டபம் அமைப்பது நமது தேசத்தலைவர்களுக்கும், தியாகிகளுக்கும் தான் என்ற மரபில் இருந்த தமிழக மக்களின் விவசாயத்திற்கு தண்ணீரும், குடிநீர்ப்பிரச்சினையைத் தீர்த்த கர்னல் பென்னிகுக் என்ற தனிமனிதனுக்கு நன்றி கடனாக இன்று சிலையையும், மணிமண்டபமும் அமைக்க அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதில் தமிழகமே பெருமையடைகிறது.
இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்