எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.- 18 - தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் 2010 செப்டம்பர் 28-இல் பிறப்பித்த ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு நேற்று (17.1.2012) நீதிபதி லோதா, நீதிபதி கோகலே அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆலையை அகற்ற சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ள வைகோ நேற்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதம் பின்வருமாறு: ஸ்டெர்லைட் ஆலை கோவா, குஜராத்தில் அனுமதி பெற முடியாமல் மராட்டிய மாநிலத்தில் அந்த அரசு கொடுத்த அனுமதியை மக்கள் போராட்டத்தால் ரத்து செய்து பிறகு தூத்துக்குடியில் இந்த ஆலை 1994-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தேசிய கடல் பூங்கா எனும் 21 தீவுகள் இருக்கின்ற கடற்கரையிலிருந்து 25 கி.மீ.க்கு அப்பால்தான் ஆலையை நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் விதித்த நிபந்தனைப்ைபடி மீறி இந்த ஆலை அமைக்கப்பட்டதாலும் அதுபோல பசுமை வளாகம் நிபந்தனைப்படி அமைக்கப்படாததாலும் சுற்றுச்சூழலை, நிலத்தை, நீரை, காற்றை மாசுபடுத்துவதாலும் சென்னை உயர் நீதிமன்றம் ஆலையை நிரந்தரமாக மூடிட ஆணை பிறப்பித்தது. இந்த ஆலை தொடர்ந்து இயங்கினால் இலட்சக்கணக்கான மக்களுக்கு உடல் நலக்கேடு ஏற்படும். விவசாயம் நாசமாகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கின்ற கடல் செல்வம் அழிந்து போகும்.
கடந்த 44 மாதங்களாக லைசென்ஸ் இல்லாமலேயே இந்த ஆலை இயக்கப்படுவது சட்டத்திற்கு விடப்படும் சவாலாகும். ஆஸ்திரேலியாவிலிருந்து தாமிர அடர்த்தியை இந்த ஆலை இறக்குமதி செய்கிறது. அதில், பேராபத்தை விளைவிக்கக் கூடிய நச்சு உலோகங்களான யுரேனியம், ஆர்ஸனிக், பிஸ்மத், ஃபுளோரின் பல நூற்றுக்கணக்கான டன்கள் இருப்பதைத் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தூத்துக்குடி சுங்க இலாகா அதிகாரிகளிடம் விவரங்களைப் பெற்று இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறேன். இந்த ஆலையில் இதுவரை நிர்வாகம் கணக்கிட முடியாத கொள்ளை இலாபத்தைச் சம்பாதித்து இருக்கிறது. அதனாலே ஆலையை மூடிவிட்டு தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும். ஆலையை நிரந்தரமாக மூடுவது ஒன்றுதான் அந்தப்பகுதி மக்களைப் பாதுகாக்கும் வழியாகும் என வைகோ எடுத்துரைந்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் ஆலையை இயக்குவதற்கு லைசென்சுக்காக 15 நாட்களுக்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், லைசென்ஸ் கொடுப்பதா? இல்லையா? என்பதை நன்கு ஆய்வு செய்து வாரியம் முடிவு எடுக்க வேண்டும் என்றும், அடுத்த விசாரணை 2012 மார்ச் 28-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தனர்.
இந்த வழக்கில் வைகோ உடன் ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் ஜி.தேவதாஸ் வழக்கறிஞர் டெல்லி ரவி, வழக்கறிஞர் பாலாஜி, வழக்கறிஞர் ஆசைத்தம்பி அவர்களும் ஆஜரானார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி வாதாடினார். என ம.தி.மு.க. செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


