எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.- 2 - மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலை படியை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு இரண்டுமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தை மையமாக வைத்து இந்த அகவிலைப்படி வழங்கப்படுகிறது. 2012 ஜனவரிக்கான அகவிலைப்படி உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்தது. தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில்கொண்டு 7 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 58 சதவீதம் அகவிலைப்படி பெற்றுவரும் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது உயரும் 7 சதவீதத்துடன் 65 சதவீத அகவிலைப்படி உயர்வை பெறுவார்கள். 2006 ம் ஆண்டு 6 வது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதிய உயர்வுக்கு பிறகு அகவிலைப்படி இதுவரை 11 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


