முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்குகிறது

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.24 - செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. ‘மங்கள்யான்’ விண்கலம், வினாடிக்கு 22.1 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து வருகிறது. 10 மாதங்களுக்கு மேலாக பயணம் செய்து, தற்போது செவ்வாய் கிரகத்தை நெருங்கி உள்ளது.

ரூ.450 கோடி செலவில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலம், கடந்த ஆண்டு நவம்பர் 5–ந் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. உலகிலேயா மிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட செவ்வாய் செல்லும் விண்கலம் மங்கள்யான் தான். ஆசியாவின் வின்வெளி போட்டியில் இந்தியா, சீனாவை விரைவில் முந்த உள்ளது.

கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீகரிஹோட்டா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஹாலிவுட் படமான கிராவிட்டி தயாரிக்கப்பட்ட செலவை விட மங்கள்யான் தயாரிக்க ஆன செலவு குறைவு என்றும் இது மிகச்சிறந்த சாதனை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்