Idhayam Matrimony

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கலாம்: சென்னை ஐகோர்ட் அனுமதி

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்குவதற்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது. கோர்ட்டின் இந்த உத்தரவால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும்   அரிசி, சர்க்கரை  திராட்சை கரும்புத்துண்டு உள்ளிட்ட   தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம்  வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கோவையை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரொக்கப்பரிசு வழங்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மாற்றி அமைக்க கோரி தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஐகோர்ட்டு விதித்த தடை உத்தரவினால், சர்க்கரை மட்டும் வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்களுக்கும், எந்த பொருளும் வாங்காத ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கம் பரிசு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சர்க்கரை மட்டும் வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்கள் மொத்தம் 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 உள்ளனர்.

இவர்களில் கடந்த 9-ந்தேதி வரை 4 லட்சத்து 12 ஆயிரத்து 558 ரே‌சன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசான ரூ.1,000த்தை வாங்கி சென்று விட்டனர். இதனால், பொங்கல் ரொக்கப்பரிசு வாங்காத மீதமுள்ளவர்கள், மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர். அவர்களும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதால், பொங்கல் பரிசான ரூ.1,000அவர்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டும்.இதற்கு ஏற்ப, கடந்த 9-ந்தேதி இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த தடை உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று  விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணை பட்டியலில் இந்த வழக்கு இடம் பெறவில்லை.

இதையடுத்து நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘சர்க்கரை வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சுமார் 1 மணியளவில் வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்தனர். 

அதன்படி இவ்வழக்கு நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இலவசத் திட்டங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.

பொங்கல் பரிசு தொடர்பாக ஐகோர்ட் நேற்று அனுமதி வழங்கிவிட்டதால், மேலும் 10 லட்சம் பேருக்கு ரூ.1000  பொங்கல் பரிசு கிடைக்கும்.இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து