முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      அரசியல்
Image Unavailable

ஐதராபாத். நமக்குத் தேவை வினையாற்றும் பிரதமர். வாய்ப்பேச்சு விளம்பரப் பிரியரான பிரதமர் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா ஏற்பாடு செய்த மகா எதிர்க்கட்சி பேரணியில் கொல்கத்தாவில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க. ஆட்சி நாட்டு மக்களை ஏமாற்றி விட்டது என்று சாடினார்.

“5 ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் பா.ஜ.க. கையில் ஆட்சியை ஒப்படைத்தனர், ஆனால் அவர்களோ தேசத்தை ஏமாற்றி விட்டனர், துரோகம் இழைத்து விட்டனர். வெறும் முழக்கங்கள்தான் அவர்கள் ஆட்சியாக அமைந்திருக்கிறது. ஜன் தன், முத்ரா கடன், நல்லாட்சி, ஸ்மார்ட் சிட்டிகள், கறுப்புப் பணத்தை மீட்பது, 2 கோடி வேலை வாய்ப்பு, நல்ல நாள், இவையெல்லாமே வாய்ஜாலங்கள், முழக்கங்கள்” என்றார். தனது 13 நிமிட பேச்சில் வங்காள சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு மேலும் கூறியதாவது:

எங்களுக்கு ஒரேயொரு நோக்கம்தான்... இந்தியாவைக் காப்பாற்றுவது..ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது. பாஜக இந்தியாவை பிரித்தாள நினைக்கிறது. நாங்கள் இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்துகிறோம். அதனால்தான் அனைத்துத் தலைவர்களும் இங்கு கூடியுள்ளோம்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர், சிறு வியாபாரிகள் நஷ்டமடைந்தனர், ஏன் ஜிஎஸ்டி-யே ஒரு மோசடிதான். இதன் விளைவுகளாக இன்று பொருளாதார தேக்க நிலையைப் பார்க்கிறோம். என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து