முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் சுனாமி முதலாம் ஆண்டு நினைவு நாள்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ,மார்ச்.- 12 - சுனாமியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் ஜப்பானில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்   உயிரிழந்தவர்களுக்குபொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜப்பானில் கடந்த ஆண்டு மார்ச்11-ம் தேதி மதியம் 2.26 மணிக்கு வடகிழக்கு கடற்கரை பகுதியில் 9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த பூகம்பகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது.  இதனால் ஏற்பட்ட ராட்சத பேரலை புகுஷிமா மாகாணத்தை கடுமையாக தாக்கி துவம்சம் செய்தது. கட்டிடங்கள் வீடுகள் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டன. கப்பல்கள், படகுகள், கார்களும் தண்ணீரில் மிதந்தபடி ரோடுகளில் வலம்வந்தது. இந்த இயற்கை பேரழிவில் சுமார் 20 ஆயிரம் பேர் பலியாகினர். அவர்களில் 15,800 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்னும் 3 ஆயிரம் பேரை காணவில்லை. கோர சம்பவம் நடந்து ஓராண்டு ஆகியும் இடிபாடுகளை அகற்றும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது. மக்கள் சொல் லொண்ணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். பூகம்பம் மற்றும் சுனாமியில் புகுஷிமாவில் உள்ள தாய்சி அணுஉலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் உள்ள 6 அணுஉலைகள் 4 உலைகள் வெடித்து சிதறின. வெடித்து சிதறிய அணுஉலைகளை குளிர்விக்கும் பணி கடந்த 6 மாதத்துக்கும் மேல் நடைபெற்றது.  தற்போது அணுஉலை பாதுகாப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை கொடுமைகளையும், உயிர் பலிகளையும் ஏற்படுத்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுனாமியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் ஜப்பானில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த விழாவில் ஜப்பான் மன்னர் அகிடோ அவரது மனைவி ராணி மிசிகோவுடன் பங்கேற்றார்.  இவர்களுடன் பிரதமர் யோஷிகியோ நோடாவுடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago