முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை விமர்சித்து ஓட்டு வாங்க போட்டி நிலவுகிறது - எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு

சனிக்கிழமை, 9 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

நொய்டா : நாடு‌ தற்போது புதிய நீதி மற்றும் புதிய பாணியுடன் பயணித்து‌ வருவதாகவும், தன்னை விமர்சித்து ஓட்டு வாங்க போட்டி நிலவுவதாகவும் எதிர்க்கட்சிகள் மீது பி‌ரதமர் மோடி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

பிரச்சார கூட்டங்கள்

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிகள் மற்றும் பிரச்சார கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் நொய்டாவில் நேற்று பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றினார் பிரதமர் மோடி. இந்தக் கூட்டத்தில் மோடி புல்வாமா தாக்குதல் மற்றும் இந்தியா அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடத்திய பால்கோட் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர்கள் மொழியி‌ல்...

இந்த உரையின் போது அவர் “முதன்முறையா‌க நமது நாடு பயங்கரவாதிகளுக்கு அவர்கள் மொழியி‌ல் பதில் அளித்துள்ளது. ஆனால் இதற்கு முன் இருந்த அரசுகள் பயங்கரவாத தாக்குதலுக்கு பின் உள்துறை அமைச்‌சரை மாற்றிவிட்டு அமைதியாக இருந்து விட்டன. மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய‌போது அதற்குப் பதிலடி தர நமது படைகள் த‌யாராக‌ இருந்தன. ஆனால் அவற்றின் கைக‌ள் கட்டி‌ப் போடப்பட்டிருந்ததாக தகவல்கள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.

ஓட்டு வாங்குவதற்காக...

மேலும் மோடி, “புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தும் என்று எதிர்பார்த்தது. அதனால் எல்லை பகுதிகளில் அதிக ராணுவ வீரர்களை பாகிஸ்தான் குவித்தது. இந்த முறை நாம் வான் வழியில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அதிரவைத்துள்ளோம்.  சர்ஜிகல் ஸ்டிரைக் மற்றும் பால்கோட் தாக்குதல்கள் மூலம் தற்போது இருப்பது புதிய இந்தியா என்பதை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் புரிந்துகொள்ளவேண்டும். அத்துடன் தற்போது இருக்கும் இந்தியா புதிய நீதி மற்றும் பாணியுடன் பயணித்து வருவகிறது. என்னை கடுமையாக விமர்சித்து ஓட்டு வாங்க எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் போட்டி‌ நடந்துவருகிறது” எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து