Idhayam Matrimony

பா.ஜ.க வினருக்கு குமாரசாமி அட்வைஸ்

புதன்கிழமை, 20 மார்ச் 2019      அரசியல்
Image Unavailable

பெங்களூரு, பா.ஜனதாவினர் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.  
கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நல்லாட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

பாராளுமன்ற தேர்தலையும் நாங்கள் கூட்டணி மூலமே எதிர்கொள்கிறோம். சில தொகுதிகளில் நிர்வாகிகளிடையே சிறிய அளவில் பிரச்சினைகள் உள்ளது. அதை சரிசெய்து கொள்வோம். கர்நாடகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்களின் இலக்கு.  

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  பெங்களூருவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பா.ஜனதாவினர் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. அங்கிருந்து வெளியேற்றினர்.

பிற கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து ஒரு கட்சியின் தலைவருக்கு எதிராக பேசுவதை ஊக்குவிப்பதை அவர் நிறுத்த வேண்டும். பா.ஜனதாவினர் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு குமாரசாமி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து